முன் அறிவிப்பின்றி ரயில் பாதை சீரமைப்பு: மக்கள் அவதி

முன் அறிவிப்பின்றி ரயில் பாதை சீரமைப்பு:  மக்கள் அவதி
X

முன் அறிவிப்பின்றி பணிகள் நடைபெறும் ரயில்வே கேட் பகுதி 

விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் முன் அறிவிப்பின்றி பணி நடப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

விழுப்புரம், திருக்கோவிலூர்,வழி -மாம்பழபட்டு சாலையில் இந்திரா நகர் அருகே மாம்பழபட்டு ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் பகுதியில் தற்போது தண்டவாளம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தண்டவாளம் மாற்றுப்பணி இரவு நேரத்தில்தான் இதற்கு முன் நடைபெறும். தற்போது பகலில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

இந்த பணி முன்னறிவிப்பின்றி திடீரென பகல் நேரத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அங்கு பணி நடக்கும் இடத்தில் மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!