விழுப்புரத்தில் வரும் 15-ந்தேதி டிஎன்பிஸ்சி-4 மாதிரி தேர்வு
பைல் படம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-4 தேர்வு வருகிற 24.7.2022 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்வர்களிடையே பதற்றம், அச்சத்தை போக்கும் வகையிலும், 3 மணி நேரத்தை சரியாக பின்பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தை தெரிந்து கொள்வதற்காக முழு மாதிரி தேர்வு-1 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இத்தேர்வு அரசு தேர்வை போலவே முன்னேற்பாடு செய்யப்பட்டு வினாத்தாள்கள் மற்றும் ஓ.எம்.ஆர். தாள்கள் வழங்கப்பட்டது. இதில் 524 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிந்ததும் அனைவரும் பெற்ற மதிப்பெண்கள் விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு-2 வருகிற 15-ம் தேதி மதியம் 2 மணியளவில் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளதாகவும், குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu