மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
X

விழுப்புரத்தில் நடைபெற்ற  மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வெள்ளி விழா சிறப்பு பேரவை கூட்டம் 

விழுப்புரத்தில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு, விழுப்புரம் கிளையின் சார்பில் வெள்ளி விழா சிறப்பு பேரவை கூட்டம் பஞ்சரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது,

கூட்டத்திற்கு கிளைத் தலைவர் சி.ஜெயராமன் தலைமை தாங்கினார், முன்னதாக அனைவரையும் அருள் வரவேற்று பேசினார்,

கூட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, மண்டல செயலாளர் பி.குமாரசாமி, மாநில செயலாளர் தங்க.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கிளை தலைவராக சி.ஜெயராமன், செயலாளராக எம்.புருசோத்மன்,பொருளாளராக எம்.சந்திரசேகர் ஆகியோர் விழுப்புரம் கிளையின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் செயற்குழு சரவணன் நன்றி கூறினார்.

Tags

Next Story