பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி  மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

விதிமீறல் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

விழுப்புரத்தில் விதிமீறல் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திண்டிவனம் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த சாந்தகுமார் என்பவருக்கு கோட்டகுப்பம் பிரிவுக்கு விருப்ப மாறுதல் உத்திரவு வழங்கப்பட்டது. ஆனால், விழுப்புரம் மேற்பார்வை பொறியாளரால் நிர்வாக காரணம் என அப்பட்டமாக அரசியல் தலையீட்டிற்கு அடிபணிந்து அவரை கடலூர் மின் வட்டம் புதுப்பாளையம் பிரிவில் பணிபுரிய உத்திரவு அளிக்கப்பட்டது.

தலைமை பொறியாளரின் பணியமைப்பின் விதிமீறல் உத்திரவை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியுவை சேர்ந்த மூர்த்தி, முத்துக்குமரன், சேகர், புருஷோத்தமன், அருள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture