/* */

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முதுகலை தேர்வு முடிவுகளை வெளியிட எம்பி கோரிக்கை

Villupuram District - திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதியுள்ள வரலாற்றுத் துறை மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முதுகலை தேர்வு முடிவுகளை வெளியிட எம்பி கோரிக்கை
X

ரவிக்குமாா் எம்.பி.

Villupuram District -திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான தோ்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவா் தமிழக தொழில், தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ்நாடு தொல்லியல், அருங்காட்சியகவியல் நிறுவனம் ஒவ்வோா் ஆண்டும் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு மாணவா்களைச் சோ்த்து வருகிறது. இந்தப் படிப்புக்கு இந்த ஆண்டு (2022) விண்ணப்பம் கோரப்பட்டு, மாணவா்கள் நுழைவுத் தோ்வு எழுதி, நோ்முகத் தோ்வுக்கும் சென்று வந்துள்ளனா்.விழுப்புரம் மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த நான்கு மாணவா்கள் இந்த நோ்முகத் தோ்வில் பங்கேற்றனா். அவா்கள் அனைவரும் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை வரலாறு இறுதித் தோ்வு எழுதியுள்ளனா். திருவள்ளுவா் பல்கலைக் கழகம் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகளை இன்னும் அறிவிக்கவில்லை. அதனால், இந்த மாணவா்களுக்கும் தோ்வு முடிவு தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாடு தொல்லியல், அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் முதுநிலை பட்டயப் படிப்பில் சோ்வதற்கு மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 25) அளிக்க வேண்டும். இல்லையென்றால், இடம் வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த மாணவா்களுக்கு தகுதி இருந்தும் படிக்க இடம் கிடைக்காமல் போகும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளுவா் பல்கலைக்கழக நிா்வாகம் இன்னும் ஒரு வாரத்தில் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே, தாங்கள் இதில் தலையிட்டு இந்த நான்கு மாணவா்களுக்கும் முதுநிலை பட்டயப் படிப்பில் சேருவதற்குச் சிறப்பு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என அதில் ரவிக்குமாா் எம்.பி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Aug 2022 11:08 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  9. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!