திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கும்பாபிஷேகம்
திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Thiruvakkarai Chandramouleeswarar Temple-திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வானூர் தாலுகா திருவக்கரையில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது திருத்தலமாகும். வராக நதி என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் 7 நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 10 ஏக்கர் நிலப்பரவில் இக்கோவில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இக்கோவில் திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற சிறப்புடையதாகும்.
பல்வேறு சிறப்புகளை பெற்ற திருவக்கரை கோவிலில் 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து பல லட்சம் ரூபாய் செலவில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 8-ந் தேதி அனுக்சை பூஜையுடன் விழா தொடங்கியது. கடந்த 9-ந் தேதி காலை சாந்தி ஹோமமும், மாலை முதல் கால பூஜையும், 10-ந் தேதி காலை 2-ம் கால பூஜையும், மாலை 3-ம் கால பூஜையும் நடந்தது.
விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சக்கரபாணி எம்.எல்.ஏ., மற்றும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக மரக்காணம், திண்டிவனம் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆன்மிக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த இரு கோயில்களும் பௌர்ணமி தினங்களில் மாதம் தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று தரிசனம் செய்து அங்குள்ள வக்ரகாளியம்மன் அருளை பெற்று திரும்புவது அப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகளை செய்து கொடுத்து மக்களுக்கு தெய்வ தரிசனத்தை பெற்றுத்தரும் வகையில் செயல்பட்டு வருகிறது
அங்கு செல்லும் மக்கள் இரவு தங்கி பௌர்ணமி பூஜை பார்த்து நள்ளிரவில் பங்கு ஏற்றப்படும் சுடரின் முன்பு சாமி தரிசனம் செய்து தங்களின் குறைகளை அங்கு நிவர்த்தி செய்யப்படுவதாக நம்பிக்கையோடு மாதம்தோறும் சென்று வருகின்றனர். அதனால் அந்த கோயிலுக்கும் மக்கள் கொடுக்கும் காணிக்க பணம் வருவாயும் பெருகி வருவதால் அங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன
இந்நிலையில் தான் கடந்த 19 ஆண்டுகளுக்கு பின்னர் அங்குள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் வக்ரகாளியம்மன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வந்தனர் .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu