விழுப்புரம் நகராட்சியில் சிபிஎம் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் நகராட்சியில் சிபிஎம் வேட்புமனு தாக்கல்
X
விழுப்புரம் நகராட்சியில் சிபிஎம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் நகராட்சியில் 41-வது வார்டில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் சிபிஎம் போட்டியிட மனுத்தாக்கல் செய்தது. விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன, அதில் 33 வார்டுகளில் திமுகவும், 9 வார்டுகளில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது, இந்நிலையில் திமுக மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் விழுப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 41-வது வார்டு ஒதுக்கப்பட்டது, அந்த வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் து.இராமமூர்த்தி புதன்கிழமை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் போட்டியிடுவதற்கான மனுவை தாக்கல் செய்தார். பலர் மனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!