சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய  இளைஞர்  போக்ஸோ சட்டத்தில் கைது
X

பைல் படம்

விழுப்புரம் அருகே சிறுமியை ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கிய வாலிபரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய வாலிபரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் திருமால்பதி (21) என்பவர், அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

திருமால்பதி, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் திருமால்பதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
why is ai important to the future