விழுப்புரம் அருகே விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்

விழுப்புரம் அருகே விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
X

விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்றது.

Lord Ganesha Painting -விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விழுப்புரம் அருகே விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது.

Lord Ganesha Painting -விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடபட உள்ளது, இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர்.

தற்போது கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்காக நகர்ப்புறம் மட்டுமின்றி அனைத்து கிராமப்புறங்களிலும் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. விதவிதமான வடிவங்களில்... இதையொட்டி கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், அரசூர், சித்தலிங்கமடம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்டு இன்னும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான கைவினை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், பாகுபலி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், குபேந்திரருடன் இருக்கும் விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பலவித கலைநயத்துடன், பல்வேறு அவதாரங்களில் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு இருப்பில் உள்ள சிலைகளுக்கும் தற்போது நம்பிக்கையோடு அந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சிலைகளை வாங்க இப்போதே சிலைகள் தயார் செய்யப்படும் இடத்திற்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்களுக்கு பிடித்தமான சிலைகளை பார்த்து முன்பதிவு செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் விழுப்புரம் பகுதியில் இருந்து வெளி மாநிலங்கள், மாவட்டங்கள், விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி தொடங்கும் என அத்தொழில் சம்மந்தப்பட்ட கைவினை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!