மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுபவர்களி டம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுபவர்களி டம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
X

விழுப்புரம் அருகே தனியார்  காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுவோர்களை  இன்று தேசிய மகளிர் ஆணையம்  நேரில் ஆய்வு செய்தனர்

விழுப்புரம் அருகே காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை மருத்துவக் கல்லூரியில் தேசியமகளிர் ஆணையம் இன்று ஆய்வு செய்தது

விழுப்புரம் மாவட்டம், குண்டலப் புலியூர் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணை ப்பாளர் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

குண்டலப் புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் என்ற பெயரில் இயங்கி வந்த ஆதரவற்றோர் தனியார் காப்பகத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், காப்பக உரிமையாளர் ஜிபீன் பேபி (48) உள்பட 9பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களிடம் விசாரணை: காவல்துறை சோதனையில், காப்பகத்தில் தங்கியிருந்த மனநலன் பாதிக்கப்பட்ட 143 பேர், கோட்டக்குப்பத்தில் இயங்கி வந்த இதன் கிளைக் காப்பகத்திலிருந்து 24 பேர் என 167 பேர் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 16 பேரைத் தவிர மற்றவர்கள் பிற மாவட்டங்களிலுள்ள காப்பகங்களில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் உள்ள 16 பேரிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங் கிணைப்பாளர் காஞ்சன் கட்டார், உறுப்பினர் வழக்குரைஞர் எஸ்.எஸ்.மீனா குமாரி ஆகியோர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.காப்பகத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், கொடுமைகள், அத்துமீறல்கள் குறித்து விசாரித்த குழுவினர், அதை பதிவு செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, காஞ்சன் கட்டார் செய்தியாளர்களிடம் கூறியது:காப்பக சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற் கொள்கிறது. அதனடிப்படையில் எங்கள் இருவரையும் நேரில் விசாரித்து, அறிக்கை அளிக்க நியமித்தது. இதைத் தொடர்ந்து நாங்கள் (காஞ்சன் கட்டார், மீனாகுமாரி) இங்கு வந்து விசாரணை மேற்கொண்டோம். இதன் முடிவில் அறிக்கையை ஆணையத்திடம் அளிப்போம்.

காப்பகத்தில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, நீதித்துறை நடுவரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தனர். எங்கள் விசாரணையில், அது உண்மை என உறுதியானது. அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது தெரிய வந்தது என்றார் காஞ்சன் கட்டார்.

இதையடுத்து குண்டலப் புலியூரிலுள்ள காப்பகத்திலும் இக்குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வுகளின் போது குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநர் அமர் குஸ்வாஹா, ஆட்சியர் சி.பழனி, எஸ்.பி. ந. ஸ்ரீநாதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் இருவர் மாயம் எனப் புகார்:தனியார் காப்பகத்தில் தங்கி யிருந்தவர்களில் ஏற்கெனவே ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகிலுள்ள கலப்பாகுளம் பாரதிநகர் சிவசங்கரனின் மனைவி லட்சுமியம்மாள், மகன் முத்து விநாயகம் ஆகியோர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டிருந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மனநலன் பாதிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்துத் தெருவைச் சேர்ந்த நாடிமுத்து மனைவி பத்மா (47) வை 2022, டிசம்பர் 26 - ஆம் தேதி காப்பகத்தில் சேர்த்த நிலையில் அவரைக் காணவில்லை என மகன் அருள்மொழியும்,

புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த பொ.நடராஜனை (43), கடந்த 2020, டிசம்பர் 7-ஆம் தேதி சேர்த்ததாகவும், அவரை காணவில்லை என சகோதரர் கண்ணதாசனும் கெடார் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர். இதன் மூலம், காப்பகத்திலிருந்து 5 பேர் மாயமாகி உள்ளதால், காப்பகம் மீது 5 - ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ளதாக தகவல்: காப்பகத்திலிருந்து மாயமாகி விட்டதாக புகாரளிக்கப்பட்ட பத்மா, புதுச்சேரியிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, அங்குள்ள காப்பகத்தில் தங்கி யிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. கோப்புகள் வழங்கப்படும்: இந்த வழக்கை செஞ்சி டி.எஸ்.பி.பிரிய தர்ஷினி தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கான முறைப்படி உத்தரவு நகல் கிடைக்கபெற்ற பின்னர், வழக்குத் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்படும் என காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். விரைவில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அறிக்கை: காப்பகத்தில் காவல், வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் ஏராளமான மருந்துகள், மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்த தகவலின் பேரில், விழுப்புரம் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை முதுநிலை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தீபா, சுகன்யா ஆகியோர் காப்பகம் விரைந்து, இவற்றை ஆய்வு செய்து பட்டியலிட்டனர். இந்த மருந்துகள் பயன்பாடு குறித்த அறிக்கையை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் விரைவில் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!