கருவாடு மீனாகலாம், சசிகலா அதிமுகவில் சேர முடியாது: சிவி.சண்முகம் தாக்கு

கருவாடு மீனாகலாம், சசிகலா அதிமுகவில் சேர முடியாது: சிவி.சண்முகம் தாக்கு
X

விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி 

விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேட்டியில் கருவாடு கூட மீனாகலாம் ஆனால் சசிகலா அதிமுகவில் சேர என கடுமையாக பேசினார்.

விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு முன்னாள் சட்டத்துறை அமைச்சர். சி.வி. சண்முகம் இன்று நேரில் வந்து கட்சிப் பணி குறித்து கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்,

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியே உண்மையான அதிமுக அணி, எங்களுக்குதான் இரட்டை இலை சொந்தம். இதனை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக சசிகலா வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே அதிமுக அணி எங்களுக்கே சொந்தம், இரட்டை இலையும் எங்களுடையது. இதில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட வலுவான அதிமுக அணி. இதனை யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. கருவாடு மீனாகலாம், ஆனால் அதிமுகவில் சசிகலா ஒருபொழுதும் அடிப்படை தொண்டராக கூட ஆக முடியாது.

மேலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் விடப்பட்டிருந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சார்ந்த ஒப்பந்த பணிகள் தற்போது பணிகள் நடைபெற முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக நடத்திட வேண்டும், இதன் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

திமுக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருவதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை மதித்து நடக்க வேண்டும். புதிதாக நாமாக ஒரு பேரை வைத்து அழைப்பது என்பது தவறு. இதுபோன்று நாங்கள் எங்களது காலகட்டத்தில், எங்களது அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துக்களை கூறியிருந்தால் இதே ஊடகங்கள் எங்களை பல்வேறு குறைகளை கூறி இருப்பார்கள். ஆனால் தற்போதைய ஊடகங்கள் அதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்