தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
மிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க செஞ்சி வட்ட அமைப்பு கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது,
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க செஞ்சி வட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க செஞ்சி வட்ட அமைப்பு கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே. மாதவன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு கலந்துகொண்டு , அமைப்பு மற்றும் அமைப்பின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து, பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா,சாதி சான்றிதழ், ஆதார்,குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்ரவரி 15ந்தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி, கோரிக்கை மனு கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் செஞ்சி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வி. ஆல்பர்ட் வேளாங்கண்ணி, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.கீதா, வட்ட செயலாளர் ஏ. சகாதேவன், வட்ட குழு உறுப்பினர்கள் என்.சந்திரசேகர். எம்.மேகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில் வாலிபர் சங்க வட்ட தலைவர் ஜெ.வேலு நன்றியுரை கூறினார், இதில், செஞ்சி அமைப்பு தலைவராக கே. காளியப்பன், செயலாளராக.ஜி. சந்தோஷ், பொருளாளராக.சி. தங்கராசு ஆகியோர் உட்பட 10 பேர் கொண்ட புதிய கமிட்டி அமைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu