பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை
X

பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள்

பணி நிரந்தரம் செய்யக் கோரி தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், தமிழக அரசால் சுகாதார ஆய்வாளா் (நிலை-2) பதவியில் 77 போ் பணியமா்த்தப்பட்டனர். நவம்பா் மாத இறுதியுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு அளித்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!