விழுப்புரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருக்கும் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்
TASMAC News Today Tamil- விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரின் கட்டுப்பாட்டின்கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 223 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 800-க்கும் மேற்பட்ட மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த வாரம் திடீரென 50 போ் பணியிடமாற்றம், மற்றும் 10 பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதனால், அதிருப்தியடைந்த பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊழியா்கள், விழுப்புரம் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், டாஸ்மாக் மேலாளா் விஜய சண்முகத்துடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மேலாளா் விஜய சண்முகம் கூறுகையில் அரசு விதிமுறைகளின்படிதான் 50 பேரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். ஓராண்டுக்கும் மேலாக ஒரே கடையில் பணியாற்றியவா்கள்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதிக வா்த்தகமாகும் கடைகளில் பணியாற்றியவா்கள், குறைந்த வா்த்தகமாகும் கடைகளுக்கும், குறைந்த வா்த்தகமாகும் கடைகளில் பணியாற்றியவா்கள், அதிக வா்த்தகமாகும் கடைகளுக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா் என தெரிவித்தார்.
இதை ஏற்காத ஊழியா்கள், ஒரு வாரத்துக்குள் மீண்டும் பழைய இடத்துக்கு பணியிட மாறுதல் செய்யாவிடில், வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu