தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணி

தடுப்பூசி போடாதவர்களை  கண்டறிந்து தடுப்பூசி போடும் பணி
X

கோலியனூர் பகுதியில் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்திய கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தி தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளவர்களை வீடு,வீடாக சென்று கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

கோலியனுர் பகுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுவரை தடுப்பூசி போடாத பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும பணியை தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!