விழுப்புரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவா் மரகதலிங்கம் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட தலைவா் அன்பழகன் வரவேற்றாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் சிவக்குமாா் சிறப்புரையாற்றினாா். மாநில துணைத் தலைவா்கள் சுரேஷ், கண்ணையன், மாநிலச் செயலா்கள் இளங்கோவன், முகமது அலி, முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.
கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் கிடங்குகளில் பணியாற்றும் கடை பணியாளா்களை உடனடியாக கடைகளுக்கே பணிமாற்றம் செய்ய வேண்டும், கேரளத்தில் உள்ளதைப்போல மதுபானக் கூடத்துக்கும், டாஸ்மாக் கடைக்கும் சம்பந்தமில்லாத நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வருகிற செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்கத்தின் மாநில பொருளாளா் ஜெய்கணேஷ் நன்றி கூறினாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu