மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
X

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கனை பெறும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நலத்திட்ட உதவி கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.மோகன் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரசின் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் இன்று (27.12.2021) நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை,வீட்டுமனை பட்டா கோருதல்,வெள்ள பாதிப்பு நிவாரணம் கோருதல்,விதவை உதவித்தொகை,ஆதரவற்றோர் உதவித்தொகை,பட்டா மாறுதல்,தொழில் தொடங்க கடனுதவி கோருதல்,பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம்,வேலைவாய்ப்புகள் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள்,உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும். மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திட வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 31 மனுக்களும்,பொது மக்களிடம் 285 மனுக்கள் பெறப்பட்டன, முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கே மாவட்ட கலெக்டர் நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நலத்திட்ட உதவி கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி) பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!