விழுப்புரத்தில் தாட்கோ மானிய கடனுதவி: ஆட்சியர் வழங்கல்

விழுப்புரத்தில் தாட்கோ மானிய கடனுதவி: ஆட்சியர் வழங்கல்
X

தாட்கோ மானிய கடனுதவிகளை பயனாளிகளுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்  வழங்கினார்

TADCO Grant Loan Issuance in Viluppuram

தாட்கோ மூலம், மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தில் சுயதொழில் துவங்கிட தேர்வு செய்யப்பட்ட 170 நபர்களுக்கு ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (30.06.2022) தாட்கோ மூலம், மானியத்துடன் கூடிய கடன் வேண்டி இணைய தளத்தில் விண்ணப்பித்த நபர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தாட்கோ மூலம், மானியத்துடன் கூடிய கடன் வேண்டி இணைய தளத்தில் விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்வுக்குழு தலைவரும்,மாவட்ட ஆட்சித்தலைவருமான மோகன் 176 நபர்களுக்கு நேர்காணல் நடத்தினார், அதில் 170 நபர்கள் தங்கள் விருப்பப்படி சுயதொழில் துவங்கிட அவர்கள் தேர்வு செய்த வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க தேர்வு செய்து அதற்குரிய ஆணை வழங்கியதுடன், தேர்வு செய்யப்பட்ட அனைவரும் நல்ல முறையில் சுயதொழில் துவங்கி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறுவதுடன் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிட உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் கேட்டு கொண்டார். அதனை தொடர்ந்து, தாட்கோ மூலம், 50 நபர்களுக்கு தூய்மைப்பணியாளர்களுக்கான நல வாரிய அட்டையினை வழங்கி இதன் மூலம் விபத்து காப்பீடு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவி, முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களின் கீழ் பெற்று பயனடையமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட தாட்கோ மேலாளர் குப்புசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், உதவி மகளிர் திட்ட அலுவலர் முனியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil