நானும் ரவுடிதான்.. வடிவேல் காமெடியை நிஜமாக்கிய ரவுடி

நானும் ரவுடிதான்.. வடிவேல் காமெடியை நிஜமாக்கிய ரவுடி
X
காவல் நிலையத்தில் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்ற காமெடியை நிஜமாக்கும் அளவில் சரணடைந்த ரவுடி வீடியோ வைரல்

நானும் ஜெயிலுக்கு போறேன்’ என்ற வடிவேலுவின் நகைச்சுவை பாணியில் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி சரணடைந்தாா், ஆன்லைனில் வீடியோ வைரலாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தை சேர்ந்த ரவுடியான ஜமால் ( 40) என்பவர் மீது புதுச்சேரி, கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கண்டமங்கலம் பகுதியில் செயல்படும் கடைகளில் மாமூல் கேட்டு ஜமால் மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜமாலை சரணடையுமாறு கூறி உள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவர், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவர் சரணடைவதற்கு முன்பு, தான் பிரபலமடைய வேண்டும் என்பதால் தனது ஆதரவாளர் ஒருவரை வைத்து, காவல் நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூகவலைதளத்தில் பதிவிடுமாறு கூறியுள்ளார். அதன்படி ஜமால் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, ஜெயிலுக்கு போவதை நானும் ஜெயிலுக்கு போறேன், நானும் ஜெயிலுக்கு போறேன்,நானும் ரவுடி தான் என்று கூறியிருப்பார். அதேபோல் ரவுடி சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு அது தற்போது வைரலாகி ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதே போன்று வடிவேல் காமெடியை நிஜமாக்கும் வகையில் பலர் தங்களை தாங்களே ரவுடி ரவுடி என பொதுமக்கள் மத்தியில் கூறி பயமுறுத்தி வரும் வேளையிலும் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் கடைகளில் மாமுல் வாங்குவதும் ரவுடித்தனம் செய்வதும் உட்பட பல்வேறு அட்டகாசங்கள் நடந்து வருகின்றன என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!