விழுப்புரத்தில் தற்போது இடியுடன் கூடிய திடீர் மழை பெய்து வருகிறது

X
விழுப்புரத்தில் திடீர் மழை
By - P.Ponnusamy, Reporter |25 July 2021 8:35 PM IST
விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது, இந்நிலையில் இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது,
இதனையடுத்து இரவு சுமார் 8 மணி அளவில் இடியுடன் கூடிய திடீர் கனமழை பரவலாக பெய்தது, அதனால் இரண்டு நாட்களாக வாட்டி எடுத்த வெய்யில் கஷ்ட பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் இந்த திடீர் மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu