பள்ளி கல்லூரி வளாகத் தூய்மைக்காக மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர்

பள்ளி கல்லூரி வளாகத் தூய்மைக்காக   மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர்
X

விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியர் த. மோகன் தலைமையில் 'நம் பள்ளி- நம் பெருமை" தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகூட்டம் 

பள்ளி கல்லூரிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் மோகன் கூறினார்

பள்ளி- கல்லூரிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் உருவாக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ஆட்சியர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 'நம் பள்ளி- நம் பெருமை" நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்கீழ் பள்ளி- கல்லூரிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை வகித்து பேசுகையில், பள்ளி- கல்லூரிகளில் தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வினை மாணவ- மாணவிகளிடையே தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் ஏற்படுத்த வேண்டும். தூய்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் தூய்மை பற்றிய போட்டிகளில் அந்தந்த வயதுக்கேற்ப மாணவர்களை பங்குபெறச்செய்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலை வகுப்புகள் தொடங்கும் முன்பே வழிபாட்டு கூட்டரங்கில் தூய்மை குறித்த உறுதிமொழியினை மாணவர்களை எடுக்கச் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு விழிப்புணர்வு பள்ளி மற்றும் தங்கள் வீடுகளை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது என்ற செயல்விளக்கத்தினை மாணவர்களிடையே செய்து காண்பித்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சுகாதாரமான முறையில் பள்ளி மற்றும் தங்கள் வீடுகளை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

வகுப்பறைகளில் மாணவர்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதுபோல் பள்ளிகள், கல்லூரிகள், பொதுஇடங்களில் உள்ள கழிவறைகளை பயன்படுத்திய பின் எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்றைய மாணவர்கள் தான் நாளைய வருங்கால சமுதாயத்தினர், எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள ஆசிரியர்கள் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, ஆட்சியர் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளர் சரவணன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil