விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆச்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் ஜெயகிருஷ்ணன் ( 29). இவருக்கும். மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் தை மாத இறுதியில் திருமணம் நடைபெறுவதாக சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக விழுப்புரம் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சமூக நல ஆலோசகர் விமலா, மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர், சைல்டுலைன் உறுப்பினர்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு அறிவுரை வழங்கி நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இதேபோல் மயிலம் அருகே கொரலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் பிரசாந்த் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைனுக்கு தகவல் கிடைத்தது, உடனடியாக சிறுமியின் வீட்டுக்கு சென்று சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 2 சிறுமிகளையும் மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் நடக்காமல் தொடர்ந்து கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu