ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த கோரிக்கை

ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த கோரிக்கை
X

மருதூர் ஏரி மீட்பு குழுவினர் 

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த ஏரி மீட்பு குழுவினர் கோரிக்கை

மருதூர் ஏரியில் கட்டப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் கட்டுமான பணிகளை விழுப்புரம் மருதூர் ஏரி மீட்பு குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். இது குறித்து பேசுவதற்காக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அன்பழகன் அழைப்பின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.

ஆனால், பலமணி நேரம் காத்திருந்தும் மாவட்ட கலெக்டர் வருவதாக தெரியாத காரணத்தால், அதன் பிறகு நடந்த கூட்டத்தில் குடிநீர் வடிகால் அலுவலர் அன்பழகனிடம் சட்டத்திற்கு புறம்பாக மருதூர் ஏரியில் கட்டப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் கட்டுமான பணிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இது தான் எங்கள் இறுதியான முடிவு என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு ஏரி மீட்பு குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

Tags

Next Story
ai marketing future