விதிகளை மீறி ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சிபிஎம் கோரிக்கை

விதிகளை மீறி ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சிபிஎம் கோரிக்கை
X

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் எடுக்கப்படும் கூட்டேரிபட்டு ஏரிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு ஏரியில் விதிமுறை மீறி மண் எடுப்பதை தடுத்து நிறுத்த ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

கூட்டேரிபட்டு ஏரியில் மண் எடுப்பதில் விதிமீறல் அனுமதி ரத்து செய்க சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு ஊராட்சி சர்வே எண்.67-ல் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஏரி.அந்த ஏரி அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின், 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்களின் வாழ்வின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது,

கூட்டேரிபட்டில் கட்டப்படுகின்றன மேம்ம்பாலத்தின் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுப்பதற்கு அரசு அனுமதி பெற்று, அந்த அரசு அனுமதியை மண் எடுப்பதில் அந்த டிடிகே ஒப்பந்த நிறுவனம் விதியை மீறி நடப்பதால், விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் எடுக்கப்படும் கூட்டேரிபட்டு ஏரிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு ஏரியில் மண் எடுப்பதற்கு அரசு வழங்கிய அனுமதியான 90 மீட்டர் நீளம், 70 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம், என 6300 இன் அடி மண் எடுக்கப்படும். மேலும் குடியிருப்பு, ஏரிகரை, மற்றும் ஏரி வழியாக செல்லும் மின் வழிப்பாதை பாதுகாப்பு ஆகியவற்றிற்கு 300 அடி இடைவெளி என எதையும், எந்த அரசு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக ஏரியில் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று உள்ள ஒப்பந்ததாரர் அரசு அனுமதி தங்களிடம் இருக்கின்ற அகந்தையில் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் 1 மீட்டர் ஆழம் என்பதற்கு பதிலாக 3மீட்டர்முதல் 5 மீட்டர் வரை (15 அடி ஆழம்) வரை படு பாதாள பள்ளம் எடுத்து மண் எடுத்து வருகின்றனர், அதேபோல் நீளம், அகலம் 90*70க்கு பதிலாக அளவுக்கு அதிகமான நீளம், அகலத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏரியில் பள்ளம் தோண்டி வருகின்றனர், மேலும் ஏரி பகுதியில் செல்லும் மின்பாதை விதிகளும் மீறப்பட்டு உள்ளது.

இதனால் எதிர் வரும் காலங்களில் அந்த ஏரியை நம்பி உள்ள விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்படும், மேலும் நில(வயல்) மட்டத்தை விடவும், விவசாய பாசன வயல்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் ஏரிமதுகைவிடவும் ஏரியில் அதிக ஆழமாக பள்ளம் தோண்டி மண் எடுக்கபடுவதால், ஏற்படும் பள்ளத்தால் பாசனத்திற்காக பாசன ஏரிமதுகு கலிங்கல் வழி நீர் விவசாய பாசனத்திற்காக திறந்து வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படும்,

அதே வேளையில் அந்த படுபாதாள பள்ளங்களில் நீர் இருப்பு வெளியேறாமல் இருக்கும் நிலை ஏற்படும், அந்த அதிக ஆழமான பள்ளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரில் அங்கு மேய்ச்சலுக்கு செல்லும் மாடு,ஆடு உள்ளிட்ட கால்நடைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது, மேலும் அதனை காப்பாற்ற செல்லும் மாடு, ஆடு மேய்ப்பவர்கள், உரிமையாளர்கள் உயிரிழப்பு ஏற்படும்,

ஏரியில் படிந்துள்ள சத்து நிறைந்த வண்டல் மண் படிவம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், ஆனால் இந்த டிடிகே ஒப்பந்ததாரர்கள் அரசு விதிகளை மீறும் வகையில் வெளி நபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர், மேலும் இங்கு உள்ள பார் வகை மண் வெளி நபர்களின் பணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் அந்த பார்வகை மண் அடித்து தனிநபர் இடங்களில் பல இடங்களில் குவியல் குவியலாக கொட்டி, மறைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அதனால் நாங்கள் கட்சி சார்பில் பார்வையிட்ட வகையில் கூட்டேரிபட்டு ஏரியில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுப்பதில் அப்பட்டமாக அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், அரசு விதிமுறைகள் மீறி செயல்பட்டு வருகின்றனர், அதனால் உடனடியாக ஏரியில் மண் எடுப்பதை நிறுத்தி விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதை மாவட்ட நிர்வாகம் நேரில் சென்று ஆய்வு செய்து, மண் எடுக்க அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் கட்சியின் விழுப்புரம் மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது குறித்து புகார் மனுவாக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தலைமையில் மயிலம் ஒன்றிய செயலாளர் ஜி.ராஜேந்திரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பழனியை நேரில் சந்தித்து திங்கட்கிழமை கோரிக்கை மனுவாக கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!