/* */

கல் நெஞ்சம் படைத்த தாய்: குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

விக்கிரவாண்டி அருகே குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

கல் நெஞ்சம் படைத்த தாய்: குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
X
குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

விக்கிரவாண்டி அருகே குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற கல் நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முட்டத்தூர் கிராம பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து வியாழக்கிழமை குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதைகேட்ட அங்கு பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் குழந்தையின் சத்தம் வந்த குப்பைத்தொட்டியில் பார்த்தபோது, அதில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்ததும், அந்த குழந்தையை யாரோ, குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த குழந்தை, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிந்து, பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யாரோ? என கருதி அந்த தாயை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தற்போதைய கால கட்டத்தில் மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு முறை போன்ற காரணங்களால் தமிழகத்தில் குழந்தை பிறப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது. எவ்வளவு கோடிக்கணக்கில் சொத்து செல்வம் இருந்தாலும் அந்த வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லை என்றால் அத்தனை செல்வங்களும் அர்த்தமற்றதாகிவிடும்.

முன்பெல்லாம் ஒரு வீட்டில் பத்து பிள்ளைகள் இருந்த காலம் மாறி பின்னர் வீட்டிற்கு ஐந்து குழந்தைகள் என்ற நிலை வந்தது. பின்னர் அந்த நிலையும் மாறி ஒரு ஆண் ஒரு பெண் என வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் என்ற நிலை உருவானது. தற்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு தங்களது குடும்ப வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க தற்போதைய கால கடடத்தில் கிராமம் நகரம் என்ற பாகுபாடு இன்றி புதிதாக திருமணமான தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறப்பதற்கே கால தாமதம் ஏற்படுகிறது. ஒரு குழந்தை பிறக்காதா? என்ற ஏக்கத்தில் அதற்கான பிரத்யேக மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மையங்களை நோக்கி எடை எடுத்த வண்ணம் இருக்கிறார்கள் தம்பதியினர். இப்படி இருக்கையில் பெற்ற குழந்தை தேவை இல்லை என்று வீசி சென்ற தாய்க்கு என்ன பிரச்சினையோ, பெற்ற குழந்தையை ஒரு களங்கமாக, கரும்புள்ளியாக கருதி வீசி சென்ற தாயை தேடி வருகிறார்கள் போலீசார்.

Updated On: 31 March 2023 1:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...