விழுப்புரம் தொழிற்பூங்கா பணியை விரைந்து தொடங்க வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை

விழுப்புரம்  தொழிற்பூங்கா பணியை விரைந்து தொடங்க வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை
X

விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மண்டல கூட்டம் 

விழுப்புரம் மாவட்ட தொழிற்பூங்கா பணியை உடனடியாக ஆரம்பித்து வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தல்

விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாலிபர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,

கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார், முன்னதாக விழுப்புரம் மாவட்ட தலைவர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார், கூட்டத்தில் தீக்கதிர் பொறுப்பு ஆசிரியர் எம்.கண்ணன், வாலிபர் சங்க மாநில தலைவர் ஆர்.வேல்முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்,

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட தொழிற்பூங்காவின் பணியை உடனடியாக ஆரம்பித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் படித்து விட்டு வேலை இன்றி இருக்கும் வாலிபர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தமிழக அரசை வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தி கேட்டு கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்