இன்று ஸ்டாலின் விழுப்புரம் வருகை

இன்று ஸ்டாலின் விழுப்புரம் வருகை
X
இன்று புதன்கிழமை விழுப்புரத்திற்கு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் விழுப்புரம் வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) விழுப்புரம் பிரச்சாரத்திற்கு வருகிறார், அது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட பொருளாளர் இரா.ஜனகராஜ் விழுப்புரத்திற்கு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் க.பொன்முடி, நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னிஅரசு, ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார், அதனால் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து எழுச்சியோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார்,கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு கழக நிர்வாகிகள், கழக அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and future of education