கோலியனூர் ஒன்றியத்தில் கால்நடை சிறப்பு முகாம்

கோலியனூர் ஒன்றியத்தில் கால்நடை சிறப்பு முகாம்
X

சிறந்த கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்ட பயனாளிகளுக்கு கால்நடை முகாமில் பரிசுகள் வழங்கப்பட்டது. 

கோலியனூர் ஒன்றியம் மழவராயனூர் ஊராட்சி, நன்னாட்டாம் பாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் மழவராயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட நன்னாட்டாம் பாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று(22.01.2022) நடைபெற்றது,

இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லோகேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

முகாமில் டாக்டர் சிவா, டாக்டர் பாலாஜி ஆகியோர் பங்கேற்று சுமார் 485 கால்நடைகளுக்கு, சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம்,சினை ஊசி, சினை ஆய்வு ஆகிய சிகிச்சைகளை மேற்கொண்டனர். மாடுகளுக்கு தாது உப்பு கலவைகளும்,சிறந்த கிடேரி கன்று பராமரிப்பு மற்றும் சிறந்த கறவை மாடு வளர்ப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்ட பயனாளிகளுக்கு பரிசுகளும் வழங்கினர்.

இம்முகாமில் கால்நடை ஆய்வாளர்கள் டாக்டர்கள் சாந்தி, மகேந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பழனியம்மாள் , வெங்கடேசன், ராஜவேல், ஊராட்சி வார்டு உறுப்பினர் இளங்கோவன் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as a future of cyber security