விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த.மோகன்.
விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பெற வரும் 08.01.2022 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது, என மாவட்ட கலெக்டர் த.மோகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், சென்னை, தமிழ்நாடு மாநில உணவு ஆணையம், உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளதாவது, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கி அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மேலும், மாநில உணவு ஆணையத்தால் 21.12.2021 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட 7 மாவட்டங்களுக்கான பிராந்திய அளவிலான ஆய்வுக் கூட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் விரைவில் வழங்க ஏதுவாக வருகின்ற 08.01.2022 (ஜனவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் ஸ்மார்ட் குடும்ப அட்டை பெறாத திருநங்கைகளுக்கு இணையம் மூலம் ஸ்மார்ட் குடும்ப அட்டை விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்த திருநங்கைகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு இரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) இவற்றுடன் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண்ணுடன் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் பெயர் நீக்கம் செய்யவும் மற்றும் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை விண்ணப்பித்தும் பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu