தீபாவளி குற்றங்களை தடுக்க விழுப்புரத்தில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி குற்றங்களை தடுக்க விழுப்புரத்தில் கண்காணிப்பு கோபுரம்
X

கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி ஆய்வு மேற்கொண்ட எஸ்பி ஸ்ரீநாதா

தீபாவளி நெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட தற்காலிக கண்காணிப்பு கோபுரத்தில் எஸ்பி ஸ்ரீ நாதா ஆய்வு

தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் நகரத்தில் மக்கள் நெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்தை சரி செய்யவும், மாவட்ட காவல் துறையினர், மக்கள் அதிகமாக கூடும் நேருஜி, எம்.ஜி.ரோடு, கே.கே.ரோடு ஆகியன சந்திக்கும் இடத்தில் தற்காலிகமாக கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர்,

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா இரவு நேரில் சென்று, கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், பின்பு கீழே இறங்கி வந்து போக்குவரத்து நெரிசலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai healthcare products