விழுப்புரம் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி வார்டுகளில் குப்பைகளை தரம்பிரித்து பெறப்படுகிறது. இவற்றில் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் 5,000 சதுர அடிக்கு மேல் உள்ள திருமண மண்டபம், பள்ளிகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.
நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ரமணன், நகரமன்ற கவுன்சிலர் இம்ரான்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நகராட்சி மூலம் நடைபெறும் தூய்மைப்பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும் இலை, வாழைமரம், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகளை, என் குப்பை என் பொறுப்பு, என் நகரம் என் பெருமை என்ற திட்டத்தின் கீழ் தாங்களே நிர்வகித்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, தூய்மைப்பணியாளர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu