புகையில்லா போகி பண்டிகை: விழுப்புரம் நகராட்சியில் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் நகராட்சியில் புகையில்லா போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார்
விழுப்புரம் நகராட்சியில் புகையில்லா போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார்.
போகிப்பண்டிகையை முன்னிட்டு புகையில்லா போகிப்பண்டிகையாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விழுப்புரம் நகர மக்கள் தேவையற்ற துணிகள், டயர்கள், பழைய புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகையினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு பொது சுகாதாரத்திற்கும் கேடு ஏற்படுகிறது,
எனவே தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் எரிக்கக்கூடாது என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவையற்ற துணிகள், டயர்கள், பழைய புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை எக்காரணம் கொண்டும் எரிக்காமல் நகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வலியுறுத்தும் வகையிலும், புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் வகையிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நகராட்சி பூங்காவில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் சென்றார். இதில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, துப்புரவு ஆய்வாளர் மதன்குமார், கவுன்சிலர்கள் புல்லட்மணி, பத்மநாபன், அன்சார் அலி, ரியாஸ் அகமது, நவநீதம் மணிகண்டன், உஷாராணி மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu