கணவருடன் சேர்ந்து வையுங்கள்: உதவி ஆய்வாளர் மனைவி தர்ணா

கணவருடன் சேர்ந்து வையுங்கள்: உதவி ஆய்வாளர் மனைவி தர்ணா
X

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் இளங்கோவன். இவருக்கும் புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தான்குப்பத்தை சேர்ந்த இந்துமதிக்கும் கடந்த 2019 ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இருவரின் மண வாழ்க்கையில் சிறிது நாட்களில் உதவி ஆய்வாளர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது மனைவிக்கு தெரியவர, அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அதனால் உன்னுடன் வாழ வேண்டுமானால் வரதட்சணை வாங்கி வா என உதவி ஆய்வாளர் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு முறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்துமதி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!