அதிர்ச்சி ஏற்படுத்திய விழுப்புரம் மாணவர்களின் கொலை ஒத்திகை வீடியோ
பைல் படம்.
விழுப்புரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் கொலை செய்வது போன்ற ஒத்திகை வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. விழுப்புரத்தில் கேங் வாரில் தங்களுக்கு எதிரான ஒரு வாலிபரை சக நண்பர்கள் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்வது போன்ற தத்ரூப காட்சி ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக உலா வந்துகொண்டிருக்கிறது. இதில் கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி மற்றும் வன்முறை அடங்கிய வீடியோவாக அந்த வீடியோ வைரலாகி வருவதால் பொதுமக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் இந்த வீடியோவில் வரும் நபர்கள், அதனை பதிவு செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் விழுப்புரம் அருகே தோகைப்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் என்பதும், விழுப்புரம் அரசு கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. அந்த மாணவர்களின் இத்தகைய செயல் சக மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வரும் நிலையில் இதுபோன்று வன்முறை கலாச்சார வீடியோக்கள் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூகஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu