இரவா, பகலா, வெயிலா, மழையா நம்மை ஒன்றும் செய்யாது என பணிபுரியும் காவலர்கள்
தகர கொட்டகை கீழ் பணியில் இருக்கும் காவலர்கள்
மாவட்டத்தின் தலைநகரமாக இருப்பது விழுப்புரம், இங்கு உள்ள மத்திய மாநில அரசுகளின் பெரும்பாலான மாவட்ட தலைமை அலுவலகம் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தில் உள்ளது, அதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் என தினந்தோறும், நூற்றுக்கணக்கான மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருப்பது வழக்கம்,
இந்த வளாகத்தின் முதன்மை நுழைவு வாயில் சென்னை, திருச்சி, புதுச்சேரி செல்லும் சாலையை ஒட்டியே இருப்பதால் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். மேலும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வரும் ஒரு சிலர் தீக்குளிப்பு போன்ற தவறான தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது வழக்கம், இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் உடனடியாக தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி அனுப்புவர்.
இது போன்ற மனு கொடுக்க வரும் பொது மக்களின் தற்கொலை முயற்சிகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் என மக்கள் நுழையும் இடங்களில் எல்லாம் சுமார் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைக்கு பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செல்ல கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்,
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது. அப்போது மாவட்ட பெருந்திட்ட வளாக முதன்மை நுழைவு வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் மழையில் பணி செய்ய முடியாமல் ஒதுங்க வேண்டிய சூழ்நிலையிலும் மழையில் நனைந்த படியே ஒழுகும் கீத்துகிடையே பணியை செய்து வருகிறார்கள்.
நம்மை பாதுகாக்கும் பணியில் இருக்கும் அவர்களுக்கு உடனடியாக மழைநீர் ஒழுகாத வகையில் அங்கே ஒரு கட்டிடம் கட்டி தரவேண்டியது அவசியம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu