விழுப்புரம் நகராட்சியில் இன்று பதவியேற்ற முதல் பெண் தலைவர்

விழுப்புரம் நகராட்சியில் இன்று பதவியேற்ற முதல் பெண் தலைவர்
X

விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் நகர மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட தமிழ் செல்வி பிரபு.

விழுப்புரம் நகராட்சியில் இன்று முதல் பெண் தலைவராக திமுகவின் தமிழ்ச்செல்வி பதவி ஏற்றுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் நகராட்சியில் 29- வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் செல்வி பிரபு இன்று விழுப்புரம் நகர் மன்ற தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு, விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் நகர மன்ற தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா பதவி பிரமாணம் செய்து வைத்து நாற்காலியில் அமரவைத்தார், நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏ டாக்டர். லட்சுமணன், ஆகியோர் கலந்து கொண்டு புதிய நகராட்சி சேர்மனை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!