/* */

விழுப்புரத்தில் கழிவுநீர் பாலப் பணிகள் தாமதம்: மக்கள் அவதி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலை கழிவு நீர் சிறு பாலப்பணியில் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வந்துள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் கழிவுநீர் பாலப் பணிகள் தாமதம்: மக்கள் அவதி
X

ஒருவழிப்பாதையில்  இயக்கப்படும் வாகனங்கள்.

விழுப்புரம் நகரில் மந்தகதியில் நடந்து வரும் கழிவுநீர் சிறு பாலம் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட நகர பகுதிகளில் மழைக்காலத்தின்போது முக்கிய சாலையோரங்களிலும் குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு காரணம் இதுவரை நகராட்சி பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் வசதிகள் இல்லாததாலும், ஏற்கனவே இருந்த சில வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இன்னும் சில வாய்க்கால்கள் தூர்ந்து போயிருப்பதாலும், சாதாரண மழைக்கே சாலைகள் அனைத்தும் மழை வெள்ளநீர் வெளியேறும் வெளிப்புற வடிக்கால் வாய்க்காலாகவே செயல்படுவதால், சிறு மழைக்கும் நகர சாலைகள் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.

இதனால் மழைக்காலங்களின்போது சாலையோரங்களிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழுப்புரம் நகரில் சாலையோரங்களின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில முக்கிய இடங்களில் சாலையை கடந்து செல்லும் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே மேலும் புதிய பேருந்து நிலையம் அருகே என விழுப்புரம் நகரத்தில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையின் நடுவே மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் காரணமாக அச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒருவழிப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

ஆனால் இந்த வடிகால் வாய்க்கால் பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகிறது. ஆனால் வாய்க்கால் பணிகள் முடிந்த இடத்தில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலை முழுவதுமாக பரப்பப்பட்டன. ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் இதுநாள் வரையிலும் அங்கு தார் சாலை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு செல்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இச்சாலையில் செல்லும்போது சில சமயங்களில் ஜல்லிக்கற்களால் வழுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலைமையும் ஏற்படுகிறது.

அதோடு அப்பகுதியில் தார் சாலை போடப்படாததால் காற்றில் புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.

இந்த வடிகால் வாய்க்கால் பாலம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக விட்டுள்ளதால் அந்த பாலத்தின் கீழ்பகுதியில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள கடை வியாபாரிகள் மிகவும் அவதியடைந்து வருவதோடு பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து தார் சாலை போடாமல் அப்படியே கிடப்பிலேயே போட்டுள்ளதால் கடைகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இந்த வடிகால் வாய்க்கால் பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து தார் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Oct 2022 11:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?