அனுமதி இல்லாமல் பள்ளி வாகனம் இயக்கினால் பறிமுதல்: ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி பேருந்தை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்
பள்ளி வாகனங்கள் அனுமதியின்றி இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக மைதானத்தில், (18.06.2022) வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம், நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறந்ததையொட்டி, பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,தலைமை வகித்தார் பள்ளி வாகளங்களை ஆய்வு செய்யும் பணியினை துவக்கி வைத்து பேகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதை யொட்டி, பள்ளி வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்து இயக்கிடும் வகையில் வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் இப்பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டு அதனடிப்படையில் மாவட்டத்தில் 187 பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதில் 147 வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்து வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வாகனங்கள் பழுதடைந்துள்ளதை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் வாகனத்தை கொண்டு வந்து அனுமதி பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் நாளை ஆய்வுக்கு கொண்டுவர உள்ளார்கள். பள்ளி வாகனங்களை பொறுத்த வரை வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். அனுமதி பெறாத வாகனங்கள் பள்ளியின் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறிந்தால் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டுநர் உரிமமும் இரத்து செய்யப்படும் என ஆட்சியா் மோகன் எச்சரிக்கை விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu