/* */

விழுப்புரம் அருகே தனியார் ஊழியர் வீட்டில் ரூபாய் 7 லட்சம் திருட்டு

வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 7 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்றனர்

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே தனியார் ஊழியர் வீட்டில் ரூபாய் 7 லட்சம் திருட்டு
X

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் ( 30). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது உறவினர் ஒருவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த 10-ந் தேதியன்று தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். வீட்டில் ராஜ்குமாரின் தாய் மட்டும் இருந்துள்ளார். நகை திருட்டு இந்நிலையில் ராஜ்குமார் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சொர்ணாவூர் மேல்பாதிக்கு வந்தார். அப்போது அவர் தனது அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 19 பவுன் நகையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தாய் வெளியில் சென்றிருக்கும் சமயத்தில் யாரேனும் மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.7 லட்சமாகும். இதுகுறித்து ராஜ்குமார், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Aug 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது