விழுப்புரம் மாவட்டத்தில் ஆபரேஷன் மின்னல்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
Villupuram Today News -தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளை கண்காணித்து கைது செய்வதற்கு மின்னல் ரவுடி வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கினார்.
முக்கிய ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்கள் தீவிரமாக களம் இறங்கி குற்றவாளிகளை கண்காணித்து தேடினர்.
இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் மீது 9 வழக்குகள் பதியப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 206 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரி மது பாட்டில்கள் 983 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. நேற்று குட்கா வழக்குகளில் 450 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டது மேற்கண்ட தகவலை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மின்னல் ஆபரேஷன் நடவடிக்கையால் பல்வேறு குற்றவாளிகள் ஓடி ஒளிந்த நிலையிலும், போலீசார் பலரைப் பிடித்து சிறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்டத்தில் கொள்ளை கொள்ளை திருட்டு கள்ளச்சாராயம் போன்ற பல்வேறு குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் தற்போது பீதி அடைந்து தங்கள் தொழில்களை முடக்கிய நிலையில் ஓடி ஒளிந்து வருகின்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடியும் கண்காணிப்பு செய்தும் பிடிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்களை ஒழிக்கும் பணியில் மாவட்ட காவல்துறை தீவிரமான நடவடிக்கை எடுத்து வருவதன் மூலம் ஆங்காங்கே குட்கா விற்பனை செய்பவர்களும் குட்காவை கடைகளுக்கு சப்ளை செய்பவர்களும் ஓடி ஒளிந்து வருகின்றனர். அவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்
மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு கஞ்சா விற்போரை கண்காணித்து தொடர்ந்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
மேலும் போதை மாத்திரைகள் ஊசிகள் இவைகளையும் மாவட்ட காவல்துறையின் உத்தரவுபடி அந்தந்த காவல் நிலையம் மூலம் கண்காணித்து குற்றவாளிகளை பிடித்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்
காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இது மாதிரியான காவல் துறையின் நடவடிக்கைகள் மேலும் தொடர வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu