விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
கூட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா தலைமையில் சென்னை ஐஐடி தொண்டு நிறுவன ஆர்வளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியோருடன் இணைந்து சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 1,2,3 ஆகிய ஓங்கூர் முதல் மடபட்டு வரை உள்ள வழித்தடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு அதிவேக பயணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், சாலை ஓரங்களில் வாகனங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தல் குறித்து விவாதிக்கபட்டது,
தொடர்ந்து சாலை பாதுகாப்பு பணிகள் குறித்தும் மேம்பாலங்கள் வரும் வழித்தடங்களில் நீண்ட வழிதடமாக இருந்து பின்பு மேம்பாலங்களில் அருகில் வரும்போது குறுகிய வழித்தடங்களாக இருப்பதாலும் இதை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் வைக்க வேண்டும்.மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் ஆக்சிடென்ட் ஜோன் என்ற பிரதிபலிப்பான் கொண்டு அறிவுறுத்தும் பொருட்டு பாதைகள் வைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் எளிதில் வாகன விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம் என்றும்.
செங்கல்பட்டு முதல் திருச்சி வரை உள்ள நெடுஞ்சாலை ரோந்து காவலர்களுக்கு வாட்சாப் குழுக்கள் அமைத்து, நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை குழுவில் பகிரவும், அவர்களை கண்காணிக்கவும் வாட்சாப் குழு உருவாக்க வேண்டும். மேலும் குடித்துவிட்டு வானங்களை இயக்குபவர்களை அந்தந்த எல்லைக்குட்பட்ட டோல்கேட்டிலேயே நிறுத்தி சோதனை செய்து தடுத்து நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu