விழுப்புரம் நகரத்தில் கொரானா பயமறியா கூட்டம்

விழுப்புரம் நகரத்தில் கொரானா பயமறியா கூட்டம்
X
விழுப்புரம் நகரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கொரானா தொற்று பயமில்லாமல் குவிந்த மக்களால் கொரானா பரவல் அதிகரிக்கும் அபாயம்

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளற்ற ஊரடங்கை ஒட்டி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இன்று அனைத்து கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன் காரணமாக விழுப்புரம் நகரத்தில் இன்று காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உருவானது.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!