விளிம்பு நிலை மக்களுக்கு அரசு திட்டங்கள் சென்று சேர்கிறதா? என ஆய்வு கூட்டம்

விளிம்பு நிலை மக்களுக்கு அரசு திட்டங்கள் சென்று சேர்கிறதா? என ஆய்வு கூட்டம்
X
பழங்குடி, இருளர், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு அரசு திட்டம் சென்று சேர்கிறதா என்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் சார்பாக நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வது மற்றும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவது குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் வியாழக்கிழமை (11.11.2021) நடைபெற்றது.

கூட்டத்தில் பழங்குடி, இருளர், நரிக்குறவர்கள் உள்ளிட்ட பல்வேறு விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாக கிடைக்கவும், கிடைக்க பெற்றதை உறுதி செய்யவும் கலெக்டர் மோகன் கேட்டு கொண்டார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன். திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா. வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!