கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி துறை ஆய்வுக் கூட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி துறை ஆய்வுக் கூட்டம்
X

கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்ற முன்மாதிரி கிராம திட்ட ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் முன்மாதிரி கிராமத் திட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.05.2022) வியாழக்கிழமை ஊரக வளர்ச்சித்துறை மூலம் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.இரவிக்குமார், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எம்.கே.விஷ்னு பிரசாத், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!