விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி கிராமம் உருவாக்க ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி கிராமம் உருவாக்க ஆய்வு கூட்டம்
X

சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம்  உருவாக்க ஆய்வு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் தன்னிறைவு மாதிரி கிராமம் உருவாக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா (SAGY) திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினரால் தேர்வு செய்யப்படும் மாதிரி கிராமத்தில் அனைத்து நலத்திட்டங்களும், வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தன்னிறைவு அடைந்த மாதிரி கிராமமாக உருவாக்க ஆய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், விஷ்னுபிரசாத் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் முன்னிலையில் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா (SAGY) திட்ட மாவட்ட அனைத்து துறைகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு கிராம ஊராட்சியை தேர்வு செய்து, அதனை மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா (SAGY) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சியில் தனிநபர் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நகர சேவைகள் ஆகிய அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாகவும், மற்ற ஊராட்சிகளுக்கு முன்மாதிரி கிராம ஊராட்சியாகவும், உருவாக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். அதள் அடிப்படையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் 2019- 2020 ஆண்டில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காந்தலவாடி ஊராட்சி, 2020 2021 ஆம் ஆண்டு வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேராவூர் ஊராட்சி மற்றும் 2021 2022 மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முன்னூர் ஊராட்சி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் 2021-2022 ஆம் ஆண்டு மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியதச்சூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் அனைத்து துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து நீடித்த முழு வளர்ச்சியும், அனைத்து பணிகளையும் முறையாக திட்டமிட்டு குறிப்பிட்ட கால அளவில் செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களின் பங்களிப்பு இத்திட்டத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும், எனவே ஊராட்சி மன்ற தலைவர்களை இத்திட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து துறை பணிகளையும் தரமாகவும், குறித்த லத்திற்குள் முடிக்கப்பட்டு மாதிரி கிராமமாக மாற்றம் அடைய தேவையான நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைந்து வருவாய் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை எந்த ஒரு குறைபாடுகளும் இல்லாமல், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் செயல்படுத்திட வேண்டும். சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா (SAGY) திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினரால் தேர்வு செய்யப்படும் மாதிரி கிராமத்தில் அனைத்து நலத்திட்டங்களும், வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள அளைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தன்னிறைவு அடைந்த மாதிரி கிராமமாக உருவாக்க முன்வர வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர், மாவட்ட அளவிலான அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேராவூர், முன்னூர் மற்றும் பெரியதச்சூர் ஆகியோர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் திடீர் இடைநிறுத்தம்..!