விழுப்புரத்தில் மண்டல அளவிலான கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்

விழுப்புரத்தில் மண்டல அளவிலான கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்
X

மாணவர் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான கல்வித் துறையின் ஆய்வு கூட்டம் 

விழுப்புரத்தில் மாணவர் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான கல்வித் துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இன்று (04.01.2022) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கான பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது,

கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது,

கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார்,மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா