விழுப்புரத்தில் மின்சார வாரிய ஓய்வுபெற்றோர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஓய்வுபெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கிளைத் தலைவர் சி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது,
மாநில செயலளார் தங்க.அன்பழகன், கிளை செயலாளர் எம் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்திட வேண்டும்,வைரவிழா சலுகை பாரபட்சமின்றி அனைத்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்,
மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிபந்தனைகளை அகற்றி அனைத்து மருத்துவ செலவுகளையும் காப்பீட்டு நிறுவனமே வழங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்,2003-க்கு முன்பும், பின்பும் பணியில் சேர்ந்து பின்னர் ஓ ய்வுபெற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி பணிக்காலத் சேர்த்து அரசாணை எண்:408 நாள் : 25-09-2009-ஐ அமல்படுத்தி ஓய்வூதியம், ஓய்வூதிய திருத்தம் மற்றும் பணிகொடை வழங்கி வேண்டும்,
விழுப்புரம் திட்ட நிர்வாகமே ஓய்வூதியர் குறைதீர்ப்புக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சட்ட ரீதியான குறைபாடுகளை, உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
கிளை பொருளாளர் எம்.சந்திரசேகரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu