மின்சார வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க தீர்மானம்

மின்சார வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க தீர்மானம்
X

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பேரவை கூட்டம்  

விழுப்புரத்தில் நடைபெற்ற மின்சார வாரிய ஓய்வூதிய அமைப்பின் கூட்டத்தில் மின்சார வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு விழுப்புரம் கோட்டம் சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு கோட்ட தலைவர் ஆர்.சண்முகம் தலைமை தாங்கினார்,

கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி தொடர்ந்து பெற்றிட, மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்திட வேண்டும், மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், சென்னையில் வருகின்ற 20 ந் தேதி நடக்கவுள்ள தர்ணாவில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

கூட்டத்தில் ஆர்.சன்முகம் கோட்டத் தலைவராகவும், வி.பாண்டுரங்கன் கோட்டச் செயலாளராகவும், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 9 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டனர்,

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்