தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் பணியை தொடங்க கோரிக்கை
விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில குழு கூட்டம்
Ponnaiyar River -விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் உடைந்த எல்லீஸ்சத்திரம் தளவனூர் ஆகிய தடுப்பணைகளின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் பி.சண்முகம் தலைமை தாங்கினார், மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் கலந்து பேசினர், கூட்டத்தில் மாநில கரும்பு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் எஸ்.வேல்மாறன், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் ஆர்.தாண்டவராயன், செயலாளர் ஆர்டி.முருகன்,பி.சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், மழையில் பாதிக்கப்பட்டு உள்ள நெல் பயிர்களை அரசு கணக்கீடு செய்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதா 2022 மை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும், ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்கலின் நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றில் உடைந்த எல்லீஸ் சத்திரம், தளவனூர் தடுப்பணைகளில், உடனடியாக அந்த இடத்தில் புதிய அணை கட்டும் பணிகளை தொடங்கி, தரமாக கட்டவேண்டும், அதே ஆற்றில் சொர்ணாவூர் தடுப்பணை பழுதடைந்து உடையும் நிலையில் உள்ளதை அரசு பார்வையிட்டு உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மதவாத சக்திகளை எதிர்த்து சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட ஒன்பது கட்சிகளின் சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சி பி எம் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பெ சண்முகம் மற்றும் சிபிஎம் கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி ரவீந்திரன் விழுப்புரம் மாவட்ட செயலாளர் என் சுப்பிரமணியன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு சனாதான அமைப்புகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இந்த மனித சங்கிலி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழுப்புரம் சிக்னல் ரயில் நிலையம் வரை நீண்டிருந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu