ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க மின்சார ஊழியர்கள் கோரிக்கை

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க மின்சார ஊழியர்கள் கோரிக்கை
X

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல கூட்டம் 

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல கூட்டத்தில், ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல கூட்டத்தில், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல கூட்டம் நடைபெற்றது,

கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி தலைமை தாங்கினார், கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் டி.பழனிவேல்,மண்டல செயலாளர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திடவும் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள வேலைநிறுத்தத்தில் திரளாக கலந்து கொள்வது, மின் ஊழியர்கள் விபத்தில்லாமல் வேலை செய்திட தரமான மின்கம்பங்கள், தளவாட பொருட்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும், மின்வாரியத்தில் பொறியாளர் முதல் களப்பிரிவு பணியாளர்கள் வரை வழங்கவேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.தேசிங்கு நன்றி கூறினார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா